பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ஒரு பாடலோ, படமோ வெளிவரும் முன் வெற்றி பெற வைக்க சொல்லி பத்திரிகையாளர்களிடம் எடுத்து வருவதும், அது பெரும் வெற்றி அடைந்து விட்டால் பத்திரிகையாளர்களை கண்டு கொள்ளாததும் சமீபகாலமாக சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லேப்பில் மாஜா தளம் மூலம் வெளியிடப்பட்ட பாடல் ‛என்ஜாய் என்சாமி. பாடகி தீ மற்றும் அறிவு பாடிய இந்தப்பாடல் தான் இப்போது எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாடலை ரசித்து வருகின்றனர். யு-டியூப்பில் மட்டும் இந்த பாடலுக்கு 98 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் பாடலை பாராட்டி டுவீட் செய்ததோடு, அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.
இதனிடையே இப்பாடலுக்கான வரவேற்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட கலைஞர்களிடம் பேட்டி எடுக்கலாம் என பத்திரிக்கையாளர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ரஹ்மானின் மேனேஜர் நோயல் என்பவர் கனடாவில் உள்ளார். அவர் மூலம் தான் எல்லாவற்றையும் தொடர்பு கொள்ள முடியுமாம். அவரிடம் பேசினால் முதலில் வாட்ஸ்-அப் அல்லது மெயில் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவருக்கு அந்த பதில் திருப்தி அளித்தால் மட்டுமே கலைஞர்களை பேட்டி எடுக்க ஏற்பாடு செய்வாராம்.
சரி அவர் தான் அப்படி இந்த பாடலை பாடி தீயை தொடர்பு கொள்ளலாம் என அவரின் தாயாரை தொடர்பு கொண்டால் அவரும் சரியான பதில் தருவது கிடையாது. அறிவை கேட்டால் எதுனாலும் நோயலிடம் கேளுங்கள் என்று கூறுகிறார். பல மீடியாக்களில் இருந்தும் பல நாட்களாக இந்த பாடல் குழுவிழனரை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லாததால் பத்திரிகையாளர்கள் கோபத்தில் உள்ளனர்.
ஏற்றி விடும் ஏணியை எட்டி உதைக்க நினைப்பது ஏனோ.?