செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் நடித்தவர் அனிஷா. இவருக்கும், நடிகர் விஷாலுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதையடுத்து ஆறு மாதங்களில் திருமணம் நடைபெறும் என்று தெரிவித்தனர். ஆனால் இப்போது வரை அவர்களின் திருமணம் நடைபெறவில்லை. அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் இருந்து விஷாலுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டெலிட் செய்தார் அனிஷா. அதன்பிறகுதான் விஷால்- அனிஷா திருமணம் நிச்சயதார்த்தத்தோடு முற்று பெற்று விட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து தற்போது கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வரும் அனிஷா, தெலுங்கு சினிமாவில் மீண்டும் பிரவேசிக்க தயாராகி விட்டார். முன்பு நடித்ததை விட பெரிய அளவிலான வேடங்களில் நடிக்க தீவிர படவேட்டையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.