ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகர் விக்ரமை வைத்து ஷங்கர் இயக்கிய அந்நியன் படம், ஹிந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது. ரன்வீர் சிங் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்று(ஏப்.,14) வெளியானது. இந்நிலையில் அந்நியன் படத்தின் கதைக்கான உரிமம் என்னிடமே உள்ளது. இப்படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்வது என்றால் என்னிடம் அனுமதி பெற வேண்டும், அதை மீறி செய்வது சட்டத்திற்கு புறம்பமானது'' என ஷங்கருக்கு இப்பட தயாரிப்பாளர் ஆஸ்கர் வி.ரவிச்சந்திரன் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து ரவிச்சந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார் ஷங்கர். அதில் அவர் கூறியிருப்பதாவது : 2005ல் அந்நியன் படம் வெளியானது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும் இது என்னுடைய கதை என்று. இப்படத்தின் டைட்டிலில் கூட கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்று தான் வெளியானது. இப்படத்திற்காக சுஜாதா வசனங்கள் மட்டுமே எழுதினார். ஆனால் அவர் இப்படத்தின் கதையை எழுதினார் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்நியன் படத்தில் வசனம் எழுதியதற்காக அதற்கான உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இப்படத்தில் ஈடுபடவில்லை.
இப்பட கதை, திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கிருக்கிறது. நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்தவிதமான உரிமைகளையும் கோர முடியாது. உங்களுக்கு அந்த உரிமையை நான் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் கதைக்கான உரிமம் உங்களிடம் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஒரு தயாரிப்பாளராக அந்நியன் படம் மூலம் லாபம் பெற்றுவிட்டீர்கள். தற்போது தேவையின்றி உங்களுக்கு தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சியின் மூலம் ஆதாயம் பெற பார்க்கிறீர்கள். இனி இது போன்று பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”.
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஷங்கர்.