2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லாபம்'. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் மீண்டும் ஆரம்பமான போது படப்பிடிப்பில் நிறைய பேர் பங்கு கொண்டதாகக் கூறி படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார் நாயகி ஸ்ருதிஹாசன். அது முதலே படக்குழுவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் பிரச்சினை நீடித்து வந்தது.
இயக்குனர் ஜனநாதன் மறைவின் போதும் அவருக்கு வருத்தம் தெரிவித்தும் பதிவுகளைப் பதிவிட்டார் ஸ்ருதிஹாசன். இன்று 'லாபம்' படத்திலிருந்து 'யாமிலி யாமிலியா' என்ற பாடல் இரண்டாவது சிங்கள் பாடலாக வெளியாக உள்ளது. அது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் படக்குழுவினர் பதிவிட்டுள்ளவற்றில் ஸ்ருதிஹாசனை முற்றிலுமாக புறக்கணித்துள்ளார்கள்.
படத்தின் தயாரிப்பு நிறுவனம், இசையமைப்பாளர் இமான், நாயகன் விஜய் சேதுபதி ஆகியோரது டிவீட்டுகளில் ஸ்ருதிஹாசன் டுவிட்டர் கணக்கை யாருமே குறிப்பிடவில்லை. பாடலின் வார்த்தைகளைப் பார்க்கும் போது அது கதாநாயகி சம்பந்தப்பட்ட பாடலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அப்படியிருக்கையில் அனைவருமே ஸ்ருதிஹாசனைப் புறக்கணிப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.