மார்கோ 2 கைவிடப்பட்டது : உன்னி முகுந்தன் | வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் | பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! |
ஹிந்தியில் ஹிட் அடித்து, தேசிய விருதுகளை வென்ற ‛அந்தாதூன்' படம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் ரீ-மேக் ஆகிறது. தமிழில் ‛அந்தகன்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் பிரசாந்த், பிரியா ஆனந்த் சிம்ரன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பில் தற்போது நடிகர் கார்த்திக் இணைந்துள்ளார். உடல்நலப் பிரச்னையால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நலமாகி வந்ததும் பிரசாந்த் நடிக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றார். பிரசாந்த், சிம்ரன், தியாகராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.