நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ரஜினி, நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த படத்தை சிவா இயக்குகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தடைபட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், 2வது கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இன்னும் 30 சதவிகித படப்பிடிப்பே பாக்கி உள்ள நிலையில் 3ம் கட்டமாக சமீபத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜனி தனி விமானத்தில் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தற்போது கொரோனாவின் இரண்டாது அலை காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் மாதக் கணக்கில் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை உள்ளது.
இதனால் தற்போது ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் அவசர அவசரமாக படமாக்கி வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது. சில காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட வேண்டியது இருப்பதால் அதற்காக தெலுங்கானா மாநில அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். அது கிடைத்துவிட்டால் ரஜினி போர்ஷனை முடித்து விட முடிவு செய்திருக்கிறார்கள்.
மற்ற காட்சிகளை மேலும் இரண்டு வாரங்களில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.