தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர். முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
யுவனின் அப்பாவான இசையமைப்பாளர் இளையராஜா தீவிர இந்து மதப் பற்றாளர். அதனால், யுவன் முஸ்லிம் மதத்திற்கு மாறிய செய்திகள் வெளிவந்த போது அவை பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன்பின் யுவன் மதமாற்றம் பற்றி யாரும் பெரிய அளவில் கருத்துக்களையோ, எதிர்ப்புகளையோ இதுவரையிலும் பதிவிட்டதில்லை.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐயம் எ தமிழ் பேசும் இந்தியன் என்ற டீ ஷர்ட்டுடன் யுவனும், ஹிந்தி தெரியாது போடா என்ற டீ ஷர்ட்டுடன் நடிகர் ஷிரிஷும் இருந்த போட்டோவை யுவன் வெளியிட்ட போது சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் நேற்று குர்ரான் பதிவு ஒன்றை அவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். அது பற்றி சில ரசிகர்கள் மதப் பிரச்சாரம் செய்கிறீர்களா, என கமெண்ட் பதிவிட்டார்கள். அவர்களில் சிலருக்கு யுவன் ஷங்கர் ராஜா தனித் தனியாக பதில்களையும், விளக்கங்களையும் கொடுத்திருந்தார்.
ஒருவர், ‛நாங்கள் அனைவரும் உங்களின் இசைக்காக தான் உங்களின் பேஸ்புக் பக்கத்தை பின் தொடருகிறோம், மத பிரசங்கத்திற்கு அல்ல. நான் உங்களை தொடர வேண்டுமா என கேட்டிருந்தார். அதற்கு யுவன், ‛நீங்கள் என்னை பின்தொடர வேண்டாம் என பதில் கொடுத்துள்ளார்.
அந்தப் பதிவும், கமெண்ட்டுகளும், விளக்கங்களும் தற்போது ஸ்க்ரீன்ஷாட்டுகளாக சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகின்றன.