நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இத் தேர்தலில் திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் போட்டியிட்டார்கள்.
திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், வந்தவாசி தொகுதியில் தயாரிப்பாளர் அம்பேத்குமார், பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தொற்கு தொகுதியில் கமல்ஹாசன், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நடிகை ஸ்ரீப்ரியா, விருகம்பாக்கம் தொகுதியில் பாடலாசிரியர் சினேகன், கன்னியாகுமரி தொகுதியில் தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், தேமுதிக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் நடிகர் ராஜேந்திரநாத், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக நடிகர் மயில்சாமி, கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் போட்டியிட்டனர்.
நடிகர் விஜய் வசந்த், கன்னியாகுமரி பார்லிமென்ட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் அம்பேத்குமார் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். போட்டியிட்ட மற்ற அனைவரும் தோல்வியடைந்துள்ளார்கள்.
தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகளின் விவரம்...
உதயநிதி ஸ்டாலின் - 93285 (வெற்றி)
அம்பேத்குமார் - 1,02,064 (வெற்றி)
குஷ்பு - 39,405 (தோல்வி)
கமல்ஹாசன் - 51481 (தோல்வி)
ஸ்ரீப்ரியா - 14,904 (தோல்வி)
சினேகன் - 16,939 (தோல்வி)
பி.டி.செல்வக்குமார் - 3,106
சீமான் - 48,597 (தோல்வி)
ராஜேந்திரநாத் - 2,816 (தோல்வி)
மயில்சாமி - 1,440 (தோல்வி)
மனசூர் அலிகான் - 426 (தோல்வி)
விஜய் வசந்த் - 5,76,037 (வெற்றி)