கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
கொரோனாவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் சின்னத்திரை பிரபலங்களான ‛சுந்தரி' கேப்ரில்லா மற்றும் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா இருவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக நடித்தவர் கேப்ரில்லா சார்லடன். அதன்பின் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர், கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார். தற்போது டிவி தொடர்பான நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுப்பற்றி சமூகவலைதளத்தில், "ஹாய் மக்களே.. எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரின் அன்புக்கு நன்றி, நான் நலமாக உள்ளேன். தயவு செய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்" என பதிவிட்டுள்ளார்.
டிக்டாக் மூலம் புகழ்பெற்றவர் கேப்ரில்லா செல்லஸ். அவரது கருப்பு நிறமும், களையான முகமும் ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் அவருக்கு ரசிகர்களை உருவாக்கி தந்தது. அதுவே அவருக்கு பாசிட்டிவாகி சின்னத்திரை தொடரில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. தற்போது சுந்தரி என்ற தொடரில் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். அதிலும் கருப்பாக இருக்கும் பெண் ஒருத்தி எப்படி வாழ்க்கையில் போராடி ஜெயிக்கிறாள் என்கிற கதைதான்.
இந்நிலையில் இவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "எனக்கும் கன்பார்ம் ஆயிடுச்சு. கொரோனாவை ரொம்ப சாதாரணமாக நினைச்சிடாதீங்க, மாஸ்க் போடாம வெளியே போகாதீங்க. பாதுகாப்பாக இருங்க.' என்று எழுதியுள்ளார்.