சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து ஐதராபாத் புறநகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அவருக்கு டாக்டர்கள் பிரத்தியேகமாக சிகிச்சை அளித்தனர்.
அவர் நடித்த 'வக்கீல் சாப்' படம் கடந்த மாதம் வெளிவந்தது. அப்போது அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் காரணமாக அவருக்குக் கொரோனா வந்திருக்கலாம் என்று சொன்னார்கள். தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக அவருடைய ஜனசேனா காட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
“ஜனசேனா கட்சித் தலைவர் குணமடைந்துவிட்டார். கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனை செய்யப்பட்ட பவன் கல்யாண், மூன்று நாட்களுக்கு முன்னர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. அவருக்கு உடல் ரீதியாக வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. இருந்தாலும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு வரும் வீக்னெஸ் மட்டும் தான் இருக்கிறது என அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்காக பிரார்த்தனையும், பூஜைகளையும் செய்த ஜனசேனா தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள், முன்னெச்சரிக்கை விஷயங்கள் ஆகியவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என பவன் கல்யாண் கேட்டுக் கொண்டுள்ளார்,” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கொரோனாவிலிருந்து பவன் கல்யாண் குணமடைந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.