சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஜெய் நடித்த 'அவள் பெயர் தமிழரசி', வெங்கட் பிரபு, கிருஷ்ணா நடித்த 'விழித்திரு' ஆகிய படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளார். கொரோனா பாதிப்பு வந்ததைப் பற்றியும் அதிலிருந்து மீண்டதைப் பற்றியும் பேஸ்புக்கில் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
“திடீர் காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் என அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவரை அனுகினேன். பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தது. நுரையீரலில் மெல்லிய அளவிற்கே தாக்கம் இருந்தது. மருத்துவரின் அறிவுரைப்படி 21 நாட்கள் என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதன் மூலம் கோவிட் பாசிட்டிவ் நெகட்டிவாக மாறியது. தினசரியும் நண்பர்களில் யாராவது ஒருவர் பாசிட்டிவ் என்கிற தகவலுடனும் மரண செய்தியுடனும் பதற்றத்துடன் போனில் அழைக்கிறார்கள்.
எல்லோரிடமும் சொல்லித் தீராத அளவிற்கு பயம் இருக்கிறது. இந்த நோய் உடலில் உருவாக்குகிற உபாதைகளை விட நம் உளவியலில் உருவாக்குகிற தாக்கம் பெரிது. முகக் கவசம், தனி மனித இடைவெளி, அரசின் வழிகாட்டுதல்கள் என அனைத்தையும் தவறாது பின்பற்றுங்கள்.
கோவிட்டின் இரண்டாம் அலையிலிருந்து மட்டுமல்ல மூன்றாம் அலையிலிருந்தும் தப்பிப்பதற்கு இப்போது நாம் பின்பற்றுகிற கட்டுப்பாடுகள் தான் உதவப் போகிறது. அறிகுறிகள் தென்பட்டால் பயமும் தயக்கமும் இல்லாமல் உடனே மருத்துவரை அனுகி ஆலோசனைகளைப் பெறுங்கள்.ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதை எளிதில் வென்று விடலாம். பயமே முதல் எதிரி. பெரிய கிருமி.
தகவல் தெரிந்து போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த தோழமைகளுக்கு அன்பும் நன்றியும்.
பின் குறிப்பு
என்னை ஆட்கொண்டிருந்த எல்லா தீய பழக்கங்களையும் கைவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக நடைப்பயிற்சி செய்ததும் எனக்கு பலனளித்தது. இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு புகைப்பிடித்தல் மற்றும் இதர கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் கை விட்டு விடுங்கள். வாழ்தல் இனிது !,” என இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு ஆலோசனைப் பதிவிட்டுள்ளார்.