பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா |

வித்யாபாலன் நடித்த பாலிவுட் படமான சகுந்தலாதேவி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இது இந்தியாவில் பிறந்த மனித கம்ப்பூட்டர் என்று அழைக்கப்பட்ட சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாற்று படம். ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது வித்யாபாலன் நடித்த அடுத்த படமான ஷெர்னியும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டி சீரிஸ் தயாரிப்பில், நியூட்டன் திரைப்படத்தை இயக்கிய அமித் மசுர்கார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வித்யா பாலன், ஷரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
மனிதர்களால் வனங்களுக்கும், வன விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பையும் அதை நீக்க நினைக்கும் நேர்மையான பாரஸ்ட் ஆபீசருக்கும் இடையிலான கதை. பாரஸ்ட் ஆபீசராக வித்யாபாலன் நடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் வெளிவருகிறது.