தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள 'த பேமிலி மேன் 2' வெப் தொடரின் டிரைலர் இன்று(மே 19) யு டியூபில் வெளியிடப்பட்டது. டிரைலரில் தமிழர்களையும், எல்டிடிஇ குழுவையும் தவறாக சித்தரித்துள்ளதாக டுவிட்டரில் தொடருக்கு எதிராக டிரெண்டிங்கை ஏற்படுத்தியுள்ளனர்.
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கும், எல்டிடிஇ குழுவுக்கும் தொடர்பு இருப்பது போல் சித்தரித்து தொடரின் கதையை உருவாக்கியுள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளார்கள். இத்தொடரை ஒளிபரப்புவதை அமேசான் நிறுத்த வேண்டும் என்றும் பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு பாஜகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி டுவிட்டரில் பதிவிட்ட ஒரு விஷயத்தை மையமாக வைத்துத்தான் இதை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.
தொடரில் எல்டிடிஇ-யைச் சேர்ந்தவராக சமந்தா நடித்துள்ளதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இன்றுதான் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால் சர்ச்சை இன்னும் அதிகமாகும் என்றே தெரிகிறது.