நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கிய க.பெ.ரணசிங்கம் படத்தை இயக்கியவர் விருமாண்டி. இவர் குணசித்ர நடிகர் பெரியகருப்பு தேவரின் மகன். ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் அடுத்த படத்திற்கான முயற்சியில் இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது தம்பிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் உரிய சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய படுக்கை இல்லாமல் இருந்தது. அவருக்கு முன்னால் ஏராளமானோர் ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் விருமாண்டி, தமிழக முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் அனுப்பினார்.
"முதல்வர் அவர்களுக்கு, தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் இருக்கிறேன் ஐயா. இங்கு சுமார் 30 க்கு மேற்பட்டோர்கள் படுக்கை மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கிறோம் உதவி பண்ணுங்கள் ஐயா' என அதில் குறிப்பிட்டிருந்தார். இதன் மீது உடனடியாக நடவடிக்க எடுக்கப்பட்டு அனைவருக்கும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் விருமாண்டி.