'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

விஜய் டிவியில் நடத்தப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் தர்ஷா குப்தா. தற்போது ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தர்ஷா குப்தா தற்போது சமூக சேவையிலும் பிசியாகி இருக்கிறார்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், உணவு இன்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற உதவி பணிகளை செய்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.
ராயபுரத்தில் வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உள்ளார். "என்னால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளேன் மற்றவர்களும் இதுபோன்றவர்களுக்கு உதவ வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற சேவைகளை இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் செய்து மக்களின் துயர் துடைக்க என்னால் இயன்ற பணிகளை செய்வேன். என்கிறார் தர்ஷா குப்தா.