தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பானது. அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஒரு ஆசிரியரின் குற்றமாக கருதாமல் ஒட்டுமொத்த பள்ளியை குற்றாவாளியாக்கும் போக்கு சமூக வலைத்தளங்கில் அதிகமாக காணப்படுகிறது. அதோடு ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிரான போக்காகவும் பிரச்சினையை திருப்புகிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது : ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக் கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள்.
சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது. இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான்.
ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர். சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக கொடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.
உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்
இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவு, தாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது தான் பெண்ணின் மானம்.
இவ்வாறு தனது அறிக்கையில் பேரரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த பிரச்சினை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றம் செய்து இருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பயத்தோடு பள்ளிக்கு செல்ல முடியாது. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கடுமையான குற்றம். இதில் அரசியலையோ, சாதியையோ கொண்டு வரக்கூடாது. குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும். பயந்துள்ள குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.