கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் |
2003ல் வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. அதன்பின் 'மழை, திருவிளையாடல் ஆரம்பம்' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த 'சிவாஜி' படம் அவரை உச்சத்திற்குக் கொண்டு போனது. அந்தப் பெருமையுடன் நல்ல படங்களைத் தேர்வு செய்திருந்தால் தமிழில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பார்.
ஆனால், வடிவேலு கதாநாயகனாக நடித்த 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி தன்னுடைய இமேஜை அவராகவே கீழிறக்கிக் கொண்டார். அதன்பின் நான்கைந்து படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தாலும் ஒரு படம் கூட ஓடவில்லை. அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்தது.
2018ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி கோஸ்சேவ் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. அதன்பின் ஸ்பெயின் நாட்டில் கணவருடன் வசித்து வந்தார். இடையில் சில தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து தற்போது இந்தியாவிற்குத் திரும்பிவிட்டாராம் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கில் புதிய படங்களில் நடிக்க கவனம் செலுத்தப் போவதாக முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். அதனால், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தான் இன்னமும் கதாநாயகியாக நடிக்கத் தயார் என தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழில் அவர் நடித்துள்ள 'நரகாசூரன்' படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.