இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் |
ஐஎம்டிபி நிறுவனம் அவ்வப்போது அந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம், தற்போதைய ஐஎம்டிபி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களை ஒப்பிடும்போது 8.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வெளியான திரிஷ்யம் முதல்பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதன் இரண்டாம் பாகம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறுமா என்கிற சந்தேகம் பரவலாக இருந்தாலும், ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் ஈடுகட்டி, முதல் பாகத்திற்கு சற்றும் குறையாமல், விறுவிறுப்பாக படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். அதனால் இந்தப்படம் மொழிகளை கடந்து, பார்வையாளர்களை வசீகரித்ததால் தான், ஐஎம்டிபி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.