ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? |
நடிகைகள் தமன்னா, ஸ்ருதிஹாசன் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இப்போதுள்ள நடிகைகளுக்குள் போட்டிகள் இருந்தாலும் பொறாமை என்பது அதிகமில்லை. ஒருவரையொருவர் எந்த பேட்டிகளிலும் குற்றம் சாட்டிக் கொள்வதில்லை என்பதிலிருந்தே அதைப் பரிந்து கொள்ளலாம்.
ஒருவரை மற்றொருவர் பாராட்டித் தள்ளுவதும், ஆச்சரியப்படுவதையும் கடந்த சில வருடங்களாகவே அதிகம் பார்க்கிறோம். அந்த அளவிற்குப் பலரும் மாறிவிட்டார்கள். நடிகை தமன்னா தனது தோழி ஸ்ருதிஹாசனைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதியின் திறமைகளைப் பற்றிய ஆச்சரியப்பட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
“சில சமயங்களில் நான் சோர்வாக இருக்கும் போது ஸ்ருதிஹாசனுக்குப் போன் செய்து எப்படி இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் எனக் கேட்பேன். ஏனென்றால் அப்படி இருப்பது மிகவும் கடினமானது. ஸ்ருதி அவரது வீட்டைக் கவனிக்கும் விதம், வீட்டிலேயே இருந்தாலும் தனியாக கடுமையாக உழைப்பார். சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். அவற்றிற்கான முயற்சிகளைச் செய்வார். அவருடைய செயல்களை நேர்மையான வழியில் வைத்திருப்பார், அதே சமயம் எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் இருப்பார். நான் பார்த்து கவனிப்பவர்களில் அவரும் ஒருவர்,” எனப் பாராட்டுகிறார்.