தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை தெலுங்கு மக்கள் நீண்ட நாட்களாக வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி அது பற்றிய கோரிக்கையை வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தன்னுடைய 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய என்டிஆரின் மகனும், நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அரசியல், சினிமா பற்றி பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
என்டிஆருக்கு பாரத ரத்னா விருதுக்கான கோரிக்கை பற்றி அவரிடம் கேட்ட போது, “எனது அப்பா ஒரு போதும், அதிகாரத்துக்காகவோ, விருதுகளுக்காகவோ ஏங்கியதில்லை. எனது அப்பாவுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தால், யார் அது பற்றி முடிவெடுக்கிறார்களோ, அவர்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும். ஆனால், அவர் மக்களிடம் பெற்ற அன்போடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றுமில்லை,” என கோபமாகப் பேசினார்.
என்டிஆர் மறைந்து 25 வருடங்களாகிவிட்டது. சிலருக்கு மறைவுக்குப் பின்புதான் பாரத ரத்னா வழங்கப்பட்டது. என்டிஆர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் அவரை விருதுக்காக பரிசீலிக்கவில்லை என்ற கோபம் தெலுங்குத் திரையுலகத்தினரிடம் அதிகமாக உள்ளது.