மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” | ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித்தின் ரசிகர்கள் தொல்லை கொடுத்தனர். ஒரு வழியாக அஜித்தின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் என்றனர். பின்னர் கொரோனா பிரச்னையால் அதுவும் தள்ளிப்போனது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரே ஒரு சண்டைக்காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டியிருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் இதை படமாக்க மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள். அதனால் இனிமேலும் காத்திருக்க வேண்டாம் என்பதற்காக வலிமை படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை டில்லி அல்லது ராஜஸ்தானில் படமாக்க திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.