மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்தில் மெகா நடிகையாகி விட்டவர் பிரியா பவானி சங்கர். தற்போது அவரது கைவசம் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் உள்ளன. சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரியா பவானி சங்கரிடத்தில், உங்களை திருமணம் செய்து கொள்ளவதற்கு என்ன செய்ய வேண்டும்? எனது ஒரு ரசிகர் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
அதற்கு பிரியா பவானி சங்கர், நான் ஏற்கனவே ஒருவருடன் காதலில் இருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்வதற்கான செயல்முறை உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதுவே சிறந்தது, பாதுகாப்பானது. காரணம், என்னைப் பொருத்தவரை மேலும் ஒருவருக்கு காதலை சொல்வது சிக்கலானது என்று அந்த ரசிகருக்கு கிண்டலாக ஒரு பதில் கொடுத்துள்ளார்.
மற்றொருவர் முதல் பார்வையில் வரும் காதல் மீது நம்பிக்கை உள்ளதா என கேட்க, அதற்கு அதில் நம்பிக்கை இல்லை. என்றாலும் நான் முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விட்டேன் என்றும் பதில் கொடுத்துள்ளார் பிரியா.