தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் தயாரித்தது. ஆனால் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கமலுக்கு மேக்கப் அலர்ஜி ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் படம் தாமதமாகிக் கொண்டே வந்தது. அதையடுத்து ஒரு வருடமாக படப்பிடிப்பை தொடங்காமல் லைகா நிறுவனம் கிடப்பில் போட்டதால் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படம் மற்றும் ஹிந்தியில் ரன்வீர்சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கை இயக்க தயாரானார் டைரக்டர் ஷங்கர்.
இதனால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடித்த பிறகுதான் வேறு படங்களில் கையெழுத்திட வேண்டும் என்று ஷங்கருக்கு நீதிமன்றம் மூலம் தடை கோரியது. இதற்கான வழக்கு விசாரணை நடந்து வந்தபோதே தெலுங்கில் ராம் சரண் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் ஷங்கர் ஈடுபட்டு வந்ததால், அந்த படத்தை அவர் தொடங்காமல் இருக்க, ஐதராபாத் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது லைகா நிறுவனம்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தியன்-2 வழக்கு விசாரணை நடந்து வரும்போதே ஐதராபாத் நீதிமன்றத்திலும் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதாக ஷங்கர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வழக்கு முடிந்த பிறகு மறுவழக்கை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து விட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனிடையே ராம் சரணிடத்தில், ஷங்கருடன் இணையும் படம் எப்போது தொடங்கும்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ஷங்கர் படத்தில் நான் எப்போது நடிப்பேன் என்பது இன்னும் மூன்று வாரங்கள் கழித்து உறுதியாக தெரியவரும் என்று கூறியிருக்கிறார்.