'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை | விஜய், அஜித்துக்கு வாழ்த்து, ரஜினிக்கு பாராட்டு : 30 ஆண்டை தொட்ட சிம்ரன் பேட்டி | 3 முதல்வர்கள் திறந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள் தியேட்டர் இடிப்பு | தனுசுடன் காதலா? : சிரிப்புதான் வருகிறது என்கிறார் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் | 'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தனது கிளைகளை பரப்பி வருகிறார். அவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜகமே தந்திரம் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆனால் அதை பற்றி எல்லாம் தனுஷ் கவலைப்பட்டது போல தெரியவில்லை. அடுத்து நடிக்கும் ஹாலிவுட் படம் மற்றும் கார்த்திக் நரேன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. அதையொட்டி தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் தந்தையர் தின வாழ்த்துக்கள், எப்போதும் குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. நீங்கள்தான் எனது உலகத்தை அழகாக மாற்றினீர்கள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.