தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

கடந்த 2015 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் தணிக்கை செய்யப்பட்டு, வெளிவர முடியாமல் இருக்கும் படங்கள் பற்றிய விபரங்களை திரட்டுகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இது தொடர்பாக தனது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் 2015 முதல் 2021 வரை தயாரித்துள்ள திரைப்படங்களில், எந்தவித விற்பனை செய்யாமல் உள்ள திரைப்படங்கள், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை செய்யாமல் உள்ள திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் உள்ள திரைப்படங்கள் ஆகியவற்றின் விபரங்ககளை தரவேண்டும். ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு உரிமம் அளித்திருந்தால் அதன் முழு விவரங்களையும் அளிக்க வேண்டும்.
மேலும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்களையும் எந்த லேப்-பில் படம் உள்ளது என்ற முழுவிவரம், சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின், அந்தப் பிரச்சினை குறித்த முழு விவரங்கள் அனைத்தையும் தங்களது லெட்டர் பேடில் கடிதமாக எழுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் வருகிற 28ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் உருவாக்க இருக்கும் ஓடிடி தளத்திற்காக இந்த விபரங்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.