மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! |

தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்வரிசை இசைமைப்பாளராகி விட்டார். அதோடு தற்போது தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
விஜய் நடித்த கத்தி, மாஸ்டர் படங்களுக்கு இசையமைத்தவர் தற்போது பீஸ்ட் படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிறு வயதில் இருந்தே என்னை பாதித்த பல பாடல்கள் உள்ளன. அதில் ஒன்றான கில்லி படத்தின் கபடி பாடலை மாஸ்டர் படத்தில் ரீமிக்ஸ் செய்தேன். அதேபோல் விஜய் நடித்த கில்லி படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான அர்ஜூனனின் வில்லு என்ற பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த பாடலையும் சரியான சந்தர்ப்பம் அமையும்போது ரீமிக்ஸ் செய்வேன் என்று தெரிவித்துள்ளார் அனிருத்.