சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க சென்றது குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை கஸ்தூரி. அதில், ‛‛கொரோனா தொற்று காரணமாக மே முதல் இந்தியர்கள் அமெரிக்கா வர அந்நாடு தடை விதித்துள்ளது. யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாத நிலையில் ரஜினி மட்டும் எப்படி அமெரிக்காவிற்கு சென்றார். இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
நான் இப்படி கேட்க காரணம், அமெரிக்காவில் பணிபுரியும், படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்கா திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே ரஜினியின் அமெரிக்க பயணம் ஒரு மர்மமாக உள்ளது. ரஜினி இந்திய அரசிடம் மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்கிறார்கள். இது கவலை அளிக்கிறது. காரணம், இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கா அவரது உடம்பில் பிரச்சினை உள்ளது.
ரஜினி அங்கு சிகிச்சை பெறும் மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்குத் தானே பெயர் பெற்றது. இதை நினைக்க நினைக்க இன்னும் மோசமாக தோன்றுகிறது. தயவு செய்து விதிகள் ரஜினிக்கு பொருந்தாது என்று ரசிகர்கள் சொல்லாதீர்கள். பயங்கரமான விசயம் ஏதேனும் இருந்தால் அத்தகைய மிகப்பெரிய சட்டத்தை மதிக்கக்கூடிய குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.