பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
தமிழைப் போலவே தெலுங்கிலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 2017ல் ஒளிபரப்பான முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், 2018ல் ஒளிபரப்பான இரண்டாவது சீசனை நானி, 2019 மற்றும் 2020ல் ஒளிபரப்பான மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.
தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் முன்னர் ஒத்துக் கொண்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் காரணமாக நாகர்ஜுனா இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்குப் பதிலாக 'பாகுபலி' நடிகர் ராணா டகுபட்டி தொகுத்து வழங்கலாமென தகவல் வெளியாகியுள்ளது. ராணா, இதற்கு முன்பு 'நம்பர் 1 யாரி' என்ற டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளவர். மேலும், 'பாகுபலி' புகழும் அவருக்கு உள்ளதால் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என நினைக்கிறார்களாம்.
தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல். விரைவிலேயே 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
தமிழில் கூட கமல்ஹாசன் இந்த வருடத்துடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விட்டு விலகப் போவதாக ஒரு தகவல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.