3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா |
மலையாளத்தில் வெளிவந்த ஜோசப் படம் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. தி கிரேட் இண்டியன் கிச்சன் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் ஆகிறது. இது தவிர த்ரிஷ்யம் 2, டிரைவிங் லைசென்ஸ், அய்யப்பனும் கோஷியும் படங்களும் ரீமேக் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் அஞ்சாம் பத்திரா என்ற படமும் ரீமேக் ஆக உள்ளது. ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் குஞ்சாகோ போபன், ஷரப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்தனர்.
போலீசை மட்டும் குறிவைத்து தொடர் கொலைகள் செய்யும், சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கிற கதை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்தத் படம் 6 கோடியில் தயாரிக்கப்பட்டு சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இந்த படம் தற்போது தமிழ், இந்தியில் ரீமேக் ஆகிறது. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட், ஆஷிக் உஸ்மான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஏபி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதில் தமிழ் ரீமேக்கில் நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.