போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

'இந்தியன் 2' வழக்கு விவகாரத்தில் ஷங்கர் வேறு படங்களை இயக்குவதற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. அதனால், சிக்கலில் இருந்து தப்பித்த இயக்குனர் ஷங்கர் உடனடியாக தனது அடுத்த படமான ராம் சரண் நடிக்க உள்ள தெலுங்குப் படத்திற்கான பேச்சு வார்த்தையை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.
படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் 50வது படமான இதை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடிக்கும் படம் என்பதால் படத்திற்கான வியாபாரமும் பெரிதாகவே இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.
படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தான் இருப்பார் என முன்னர் தகவல் வந்தது. ஆனால், தற்போது தமன் இசையமைக்கவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் தமன். அதன்பிறகு நடிப்பை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
விரைவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.