தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்திய சினிமா உலகத்திற்கே யு-டியூப் வீடியோ சமூக வலைதளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்த பாடல் 'ஒய் திஸ் கொலவெறி'. '3' படத்தில் இடம் பெற்ற இப்பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் யு டியூபில் வெளியானது.
வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே இப்பாடல் வைரலாகி, இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் இந்த அனிருத் என பலரும் கேட்க ஆரம்பித்தனர். தனுஷ் பாடலாசிரியராகவும், பாடகராகவும் ஒரே பாட்டிலேயே உச்சம் தொட்டார்.
அப்பாடல் தான் தமிழ் சினிமா பாடல்களில் யு டியூபில் முதலிடத்தில் நீடித்து வந்தது. ஆனால், தனுஷ் நடித்த மற்றொரு பாடலான 'ரவுடி பேபி' பாடல் அதை விடவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 'கொல வெறி' சாதனையை முறியடித்து எங்கோ சென்றுவிட்டது. தற்போது 1183 மில்லியன் சாதனைகளுடன் அப்பாடல் தான் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள 'கொல வெறி' பாடலுக்கும் தற்போது போட்டி வந்துவிட்டது. தீ, அறிவு பாடிய தனிப்பாடலான 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் யூ டியூபில் வெளியான நான்கு மாதங்களிலேயே 280 மில்லியன் பார்வை சாதனையைக் கடந்துள்ளது.
284 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள 'கொல வெறி' பாடல் சாதனையை முறியடிக்க 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு இன்னும் 4 மில்லியன் பார்வைகள்தான் தேவைப்படுகிறது. அதையும் சீக்கிரத்திலேயே இப்பாடல் பெற்றுவிடும்.