துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் படம் சம்பந்தப்பட்ட ஒரு அப்டேட் வந்தால் போதும் அது என்ன சாதனையைப் படைக்கப் போகிறது என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் சமூக வலைத்தளங்களிலும், யு டியூப்களிலும் சில பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
டுவிட்டரில் விஜய்க்கென ஒரு அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. அந்தப் பக்கத்தில் மிக மிக முக்கியமான அப்டேட்டுகளை மட்டுமே பதிவிடுவார்கள். விஜய் படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அந்த அப்டேட்டுகளை அவர்களது பக்கங்களில் பதிவிட்டாலும் இந்த விஜய் டுவிட்டர் பக்கம்தான் சாதனைகளைப் படைக்கும் பக்கமாக இருக்கும்.
டுவிட்டர் தளத்தில் அதிகபட்ச லைக்குகளைப் பெற்ற புகைப்படம், போஸ்டர் என்ற டாப் 3 சாதனைகளை விஜய் படங்கள் தான் வைத்திருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் விஜய் மரம் நட்ட புகைப்படங்கள் 4,72,000 லைக்குடன் முதலிடத்தில் உள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் 2020ம் ஆண்டு நடைபெற்ற போது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் 4,53,000 லைக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்து மாஸ்டர் படத்தின் முதல் பார்வை 3,08,000 லைக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
தற்போது பீஸ்ட் படத்தின் முதல் பார்வை 3,06,000 லைக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது மாஸ்டர் முதல் பார்வை சாதனையை பீஸ்ட் சீக்கிரமே முறியடித்துவிடும்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன.