அப்பா பற்றி ரஜினி சொன்னதை வெளியில் சொல்ல மாட்டேன் : கமல் மகள் ஸ்ருதி | பேய் கதையில் இரண்டு நாயகிகள் | அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன் | பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட் வேண்டுமென்று அஜித் ரசிகர்கள் பலவிதமான இடங்களில் குரல் எழுப்பியும், பேனர்களைப் பிடித்தும் கேட்டு வருகிறார்கள். பாரதப் பிரமர் சென்னை வந்த போதும், இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போதும் என பல சந்தர்ப்பங்களில் இந்த 'வலிமை அப்டேட்' எதிரொலித்தது.
ஆனாலும், படக்குழுவினர் இன்னும் அந்த அப்டேட்டை சொல்லாமல் இழுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடந்து வரும் யுரோ கால்பந்தாட்டப் போட்டியில் வெம்ப்லியில் நடைபெற்ற ஒரு போட்டியில் அஜித் ரசிகர் ஒருவர் 'வலிமை அப்டேட்' கேட்டு பேனர் பிடித்துள்ளார்.
ஜுலை 15ம் தேதி 'வலிமை அப்டேட்' வெளியாகும் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. படத் தயாரிப்பாளருக்கு எந்த செலவும் வைக்காமல் அஜித் ரசிகர்கள் 'வலிமை' படத்தை உலக அளவில் பேச வைத்து வருகின்றனர்.