நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி | விஜயகாந்த் வழியில் பயணிக்கும் சண்முக பாண்டியன் | அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் லிங்குசாமி | 45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா | பிளாஷ்பேக்: சொப்பன சுந்தரி யார் தெரியுமா? | ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம் | பிளாஷ்பேக்: பாண்டியராஜனுக்காக ஆஸ்பத்திரி வாசலில் படுத்துக் கிடந்த கொல்லங்குடி கருப்பாயி | மகளின் விழாவில் குடும்பத்துடன் நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ் | நான் இன்னமும் என்னை ஒரு நடிகராகவே கருதுகிறேன் : அமீர்கான் | வளர்ந்து வரும் நடிகர் சங்கக் கட்டுமானம்: வீடியோ வெளியீடு |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி 2018ல் வெளியான கன்னட படம் கேஜிஎப் சேப்டர்1. கன்னட சினிமா சரித்திரத்திரத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய வசூலை அள்ளிய படம். இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
தற்போது கேஜிஎப்: சேப்டர்2 தயாராகி விட்டது. ஹீரோ யஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார். யஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருவன், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, ராட்சசி, கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.