படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

திருமணத்துக்கு முன்பை விட திருமணத்திற்கு பிறகுதான் அதிக படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். காஜல் நடித்து முடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ள ஹேய் சினாமிகா படத்தை முடித்து கொடுத்து விட்டார். இதுதவிர இப்போது தெலுங்கு ஆச்சார்யா, இந்தி உமா, இந்தியன் 2, டீகே இயக்கும் திகில் காமெடி படம் பிரவீன் சட்டரு இயக்கும் தெலுங்கு படம் என ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் கொரோனா காலத்துக்கு இடையிலேயும் கோஷ்டி என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை கத சொல்ல போறோம், குலேபகாவலி, காத்தாடி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இயக்கி உள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ளனர்.
கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, சுப்பு பஞ்சு அருணாச்சலம்,மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ஶ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தான பாரதி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார்.
படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இது அரசியலை கிண்டல் செய்யும் காமெடி படம். தற்போது இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் கூறியதாவது:
மொத்த திரைத்துறையும் மீண்டும் பணிகளை ஆரம்பித்திருப்பது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையில் திரைத்துறையினர் பாதிக்கப்படக் கூடாது, என்பதை புரிந்து கொண்டு, எங்கள் பணிகளுக்கு அனுமதியளித்த, தமிழக அரசுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறோம். அரசு அறிவித்துள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் முறையாக கடைபிடித்து, படமாக்கி முடித்துள்ளோம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தை குறித்தபடி முடிக்க, பெரும் ஒத்துழைப்பை நல்கிய, காஜல் அகர்வாலுக்கு நன்றி. படப்பிடிப்பை திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் கச்சிதமாக முடித்து காட்டியுள்ளார் இயக்குனர் கல்யாண். படத்தின் மற்ற பணிகள் தற்போது துவக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. என்றனர்.