அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன் | பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் |
செல்வராகவன் இயக்கத்தில் காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என சில படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அதையடுத்து புதுப்பேட்டை-2வில் அவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வராகவனோ நானே வருவேன் என்ற பெயரில் தனுசை வைத்து புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் 43ஆவது படப்பிடிப்பு முடிவடைந்ததும் செல்வராகவன் இயக்கும் படத்தில் ஆகஸ்ட் முதல் நடிக்கப்போகிறார் தனுஷ். இந்நிலையில், இந்த படத்திற்கு வைத்துள்ள நானே வருவேன் என்ற தலைப்பு ரொம்ப சாதாரணமாக உள்ளது என்று தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து டைட்டிலை மாற்றுமாறு சோசியல் மீடியாவில் கூறிவந்தனர்.
அதன் எதிரொலியாக நானே வருவேன் டைட்டிலை மாற்றும் ஆலோசனையில் செல்வராகவன் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ராயன் என்ற மாற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செல்வராகவன்தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.