இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் |
தென்னிந்தியத் திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனர் என கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பெயர் பெற்றுள்ளவர் ஷங்கர். அவருடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்திலேயே தென்னிந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய பல படங்கள் இங்குள்ள இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளன. தற்போது ராஜமவுலி போன்ற இயக்குனர்கள் பிரம்மாண்டத்தை வேறு விதமாகக் காட்டினாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடி ஷங்கர் தான்.
ஷங்கர் அடுத்து தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்திற்கு சாய் மாதவ் புர்ரா என்பவர் தான் வசனம் எழுதியுள்ளார். ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதுவது குறித்து, “ஜென்டில்மேன்' படம் வெளியான போது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கனவாக இருந்தேன். இன்று, அவருடைய படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல வெற்றிகரமான தெலுங்குப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சாய் மாதவ். “ஆர்ஆர்ஆர், சாகுந்தலம், பிரபாஸ் - நாக் அஷ்வின் இணையும் படம் ஆகியவற்றிற்கு இவர்தான் வசனம் எழுதி வருகிறார்.