திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் போலீசாக நடிக்கும் படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த படத்தின் பணிகள் தொடங்கினாலும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் வேகமடைந்து துரித கதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தின் வித்தியாசமான டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர்கள் பகத் பாசில், அந்தோணி வர்கீஸ், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த 1981-ம் ஆண்டு வெளியான ராஜ பார்வை படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் விக்ரம் படத்திற்காக அத்தகைய சவாலான வேடத்தை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் பாதி வரை கண்பார்வை உள்ளவராகவும் பாதிக்கு மேல் பார்வையற்றவராகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக நயன்தாரா - நெற்றிக்கண் படத்திலும், வரலட்சுமி - ராஜபார்வை படத்திலும் பார்வையற்றவராக நடித்து வருகின்றனர்.