மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
நட்ராஜ் சுப்பிரமணியம் என்கிற நட்டி கோலிவுட், பாலிவுட்டில் பிரபலமான ஒளிப்பதிவாளர், என்றாலும் அவருக்குள் இருந்தது நடிப்பு ஆசை. நாளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சக்கரவியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக, கதம் கதம், என்கிட்ட மோதாதே, போங்கு, சண்டிமுனி, வால்டர் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் இவற்றை விட அவர் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்த சதுரங்க வேட்டை, நம்ம வீட்டு பிள்ளை, கர்ணன் படங்கள் தான் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தது.
தற்போது நட்டி மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம். புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கிறார். படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய வேடங்களில் பிளாக் ஷீப் நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.