தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இது அந்தாலஜி படங்களின் சீசன். பாவ கதைகள், குட்டி ஸ்டோரி, நவரசா என ஏராளமான அந்தாலஜி படங்கள் உருவாகி உள்ளது. பல உருவாகி வருகிறது. அந்த வரிசையில் உருவாகும் படம் 4 ஸாரி (4 மன்னிப்புகள்).
சேப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன், ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன், மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன், தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் தயாரிப்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் தயாரிக்கும் படம் 4 ஸாரி.
காளி வெங்கட், பிக்பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்ஷி அகர்வால், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். சக்திவேல் இயக்குகிறார். வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜெயராமன் இசை அமைக்கிறார்.
சமுதாயத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் இப்படத்திற்கு 4 ஸாரி என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை இப்படம் பிரதிபலிக்க உள்ளது. இப்படம் அந்தாலஜி படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. என்கிறார் இயக்குனர்.