3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா |
சினிமாவில் மட்டுமல்ல எந்த ஒரு துறையிலும் 'விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி' என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். சினிமாவில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றவர்கள் கூட இன்று ஸ்டார்களாக உயர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஒருவரைப் பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தெலுங்கில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவராக இருப்பவர் ஜானி. தமிழில் 'குலேபகாவலி, மாரி 2, நம்ம வீட்டுப் பிள்ளை, பட்டாஸ், டாக்டர், பீஸ்ட்' உள்ளிட்ட படங்களுக்கு மாஸ்டர். 'ரௌடி பேபி' பாடலுக்கு நடனம் அமைத்தவரும் இவர் தான்.
இன்றைக்கு முன்னணி டான்ஸ் மாஸ்டராக இருக்கும் இவரை அதிகம் வளர்ந்துவிட்டர் ராம் சரண் தேஜா. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள படத்திற்கு ஜானி டான்ஸ் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அது பற்றி, “முக்காப்புலா' பாடலுக்கு மேடையில் நடனமாடியிருக்கிறேன். 'பாய்ஸ்' படத்தில் 500க்கும் அதிகமான பின்னணி டான்ஸர்களில் நானும் ஒருவன். ஷங்கர் சாரைப் பார்த்து பிரமித்துப் போனவன். இன்று என்னுடைய அபிமான ஹீரோ ராம் சரண் சார் நடிப்பில் ஷங்கர் சார் இயக்கும் படத்திற்கு நான்தான் மெயின் டான்ஸ் மாஸ்டர் என்பதை நம்பவே முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார். தொடர்ந்து ஆதரவு கொடுத்து சிறந்த வாய்ப்புகளைக் கொடுக்கும் ராம் சரண் சார், தில் ராஜுகாரு ஆகியோருக்கு என்றென்றும் நன்றி,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஜானி.