அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் |

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 19 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார்.