‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் |
தெலுங்கு நடிகர் சங்கத்தில் தற்போது நிர்வாகிகளாக உள்ளவர்களின் பதவிகாலம் முடிகிறது. இதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு, நரசிம்மராவ், நடிகைகள் ஜீவிதா ராஜசேகர், புஷ்பா, ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் கன்னடர் பிரகாஷ்ராஜ் போட்டியிடக்கூடாது என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனை பலரும், நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி வருகிறார்கள். பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாராவ், பிரகாஷ்ராஜின் பெயரை குறிப்பிடாமல் கூறியிருப்பதாவது:
தெலுங்கு நடிகர் சங்கத்தில் போட்டியிடுகிறவர்கள் தெலுங்கர்களாக இருக்க வேண்டும். கன்னடத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள நடிகர் சங்கத்திற்கு போட்டியிட வேண்டும். இங்கே போட்டியிட பிறருக்கு உரிமை இல்லை. தெலுங்கு பட உலகை சேர்ந்த சிலர், பிற மாநில நடிகர்களுக்கு ஆதரவு கொடுப்பது ஏன்? என்று புரியவில்லை. தெலுங்கு நடிகர் சங்கத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்தவரே தலைவராக இருக்க வேண்டும். என்கிறார் கோட்டா சீனிவாசராவ்.
முன்னணி நடிகரான என்.டி.பாலகிருஷ்ணா நடிகர் விஷ்ணு மஞ்சுவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். விஷ்ணு மஞ்சு பாரம்பரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு தனது சொந்த பணத்தில் கட்டிடம் கட்டுவார். அவர் தலைவர் ஆனால் நானும் பணம் கொடுப்பேன். தலைவர் பதவிக்கு வலுவானவர்களே வர வேண்டும். என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பிரகாஷ்ராஜூக்கு ஆதரவு தெரிவித்திருப்பது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தினர் தெலுங்கு சினிமாவில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதால் அவர் கைகாட்டுகிறவரே வெற்றி பெறுவார் என்கிறார்கள்.