இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
ராஜமவுலியின் இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்ட சரித்திரப் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்திற்காக ஒவ்வொரு மொழியிலும் பிரமோஷன் செய்வதற்காக ஒரு பிரமோஷன் பாடலைப் படமாக்க உள்ளார்கள். அதற்கான வேலைகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இசையமைப்பாளர் கீரவாணி ஒவ்வொரு மொழியிலும் இருந்தும் ஒரு பிரபலத்தைத் தேர்ந்தெடுத்து பாடலை பாட வைக்கப் போகிறாராம். ஹிந்தியில் இசையமைப்பாளர் அமித் த்ரிவேதியும், தமிழில் அனிருத்தும் அப்பாடலைப் பாடப் போகிறார்களாம்.
இது குறித்து அனிருத்திடம் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி கேட்டதும் அனிருத் உடனே சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள். ஏற்கெனவே மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் சில ஹிட் பாடல்களைப் பாடியுள்ளவர் அனிருத்.
'ஆர்ஆர்ஆர்' போன்ற பிரம்மாண்ட படைப்பில் பங்கெடுப்பதில் அவருக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும். 'இந்தியன் 2' படம் தாமதமாகி வரும் நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் அனிருத் ஒரு பாடலைப் பாடினால் அவருக்கு அது இன்னும் புகழைத் தேடிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.