திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
'சார்பட்டா பரம்பரை' படம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. பொதுவாகவே, பழைய மலரும் நினைவுகள் என்றாலே பலருக்கும் பிடிக்கும். அந்தக் காலங்களில் மக்கள் எப்படியிருந்தார்கள் என்பதை ரசித்துப் பார்ப்பார்கள். அப்படி 1975ம் ஆண்டு காலம் என்பதால் இப்போதைய 90ஸ், 2 கே கிட்ஸ்களுக்கு படம் சுவாரசியமாக அமைந்திருக்கிறது.
'சார்பட்டா பரம்பரை' படத்தின் ஆஜானுபாகுவான ஆர்யாவின் பாக்சர் தோற்றமும், அவரை எதிர்க்கும் 'வேம்புலி', 'டான்சிங் ரோஸ்' ஆகியோரது தோற்றமும் ரசிகர்களுக்கு பல மீம்ஸ்களுக்கான சோர்ஸ் ஆக அமைந்துவிட்டது.
பலரும் பலவிதமான மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த விதத்தில் ஒரு மீம்ஸ் கிரியேட்டர் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த பாக்சிங் படங்களை வைத்து ஒரு மீம்ஸ் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் ரசிர்களைக் கவர்ந்துள்ளது.
விஜய் நடித்த 'பத்ரி', ஜெயம் ரவி நடித்த 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி', ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்', சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே', ஜெய் நடித்த 'வலியவன்', உள்ளிட்ட சில பாக்சிங் படங்களை 'சார்பட்டா பரம்பரை' படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளியுள்ளார்கள்.
இனி வர உள்ள பாக்சிங் படங்களுக்கான ஒப்பீடாக, 'சார்பட்டா பரம்பரை' படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.