போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

1990களில் கனவு கன்னியாக இருந்த குஷ்பு, சினிமா மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சியும், அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்த ஜாக்கெட்டும் பிரபலமானது. அதன்பிறகு தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அரசியலுக்கு போனார், தி.மு.க, காங்கிரசில் இணைந்த அவர் தற்போது பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக, அரண்மனைக்கிளி படத்தில் நடித்த காயத்ரி நடித்து வருகிறார். இவரது ரோலில் தான் குஷ்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்ட தொடர் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இதில் முழுக்க முழுக்க திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதில் குஷ்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.