ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து வருகிறது. இப்பாடலை யு டியுபில் இப்போதும் கூட தினமும் ரசிகர்கள் ரசித்துப் பார்த்து வருகிறார்கள். அதன் காரணமாக தற்போது 1200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 1100 மில்லியன் சாதனையைக் கடந்த இப்பாடல், அடுத்த ஐந்து மாதங்களுக்குள் மேலும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று இப்போது 1200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் இப்பாடலுக்கு சராசரியாக தினமும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்து வருகிறது.
இப்பாடல் யு டியூப் தளத்தில் வெளியாகி இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்துள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.
யுவன் இசையில் தனுஷ் எழுதி தீ-யுடன் பாடிய இப்பாடலுக்கு ஜானி மாஸ்டரின் நடன அமைப்பில் தனுஷ், சாய் பல்லவியின் அசத்தல் நடனமும் இப்பாடலை உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.