2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

விஜய் நடித்த பிகில் படம் சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் கல்லூரி காலத்தில் நான் தான் பிகில் என்கிறார் சூர்யா. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவர் என்கிற முறையில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சி மூலம் என் கல்லூரி நண்பர்களை மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. எனது கல்லூரி கால இனிமையான நினைவுகள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத் தெரியாது. ஆனால் பாடல்களை விசில் மூலம் வெளிப்படுத்துவேன். கல்லூரி விழாக்களில் எனது விசில் தான் சத்தமாக கேட்கும். அதனால் எல்லோரும் என்னை பிகில் என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள். அப்படி அழைத்த பலர் இங்கே இருக்கிறார்கள். என்றார்.