தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன்பு யாஷிகா நள்ளிரவில் நண்பர்களுடன் அதிவேகமாக காரில் பயணித்து வந்த போது கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் யாஷிகாவின் நண்பர் வள்ளிச் செட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது ஆண் நண்பர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் யாஷிகாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அறுவை சிகிச்சை உள்ளாக்கப்பட்டார். தற்போது யாஷிகா உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில் யாஷிகாவுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அதில் "டார்லிங் இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். எனவே தான் நாம் இதை விபத்து என்கிறோம். ஜனனம் மற்றும் மரணம் இரண்டும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. யாரும் அதை மாற்ற முடியாது. எனவே நீயும் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளாய். உனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சம்பவத்திற்கு உன்னை நீயே குற்றம் சொல்வதை முதலில் நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிடு. உன் மனசாட்சியை உறுதியாக வைத்துக் கொள். மற்றவற்றை நீயே கவனித்துக் கொள்ளலாம். இந்த கோர விபத்தில் இருந்து நீ தப்பித்து இருக்கிறாய் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.