ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகியுள்ள புது நடிகை தான் இனி வெண்பா என ரசிகர்கள் பேசி வந்த நிலையில், வெண்பா கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலிலேயே அதிகம் பிரபலமான கதாபாத்திரங்களில் வெண்பா என்கிற வில்லி கதாபாத்திரமும் ஒன்று. வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவுக்கு ஒருபுறம் அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் ரசிகர்களும் குவிந்து வந்தாலும், அவரை உண்மையான வில்லியாகவே நினைத்து திட்டுபவர்களும் ஏராளம். அந்த அளவுக்கு அவர் தனது நடிப்பு திறனில் ஜொலித்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரசிகர்களால் வெண்பா கதாபாத்திரத்தில் வேறுயாரையுமே பொருத்தி பார்க்க முடியாத அளவுக்கு கேரக்டருடன் ஒன்றிவிட்ட பரீனாவை ரசிகர்ளும் வில்லி, வெண்பா எனவே செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் கருவுற்ற அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. அதேசமயம் சீரியலுக்குள் சல்மா அருண் என்ற புதிய நடிகை என்ட்ரியாகவே இவர் தான் புது வெண்பா என பார்வையாளர்கள் நினைத்தனர். ஆனால், பரீனாவின் சமூக ஊடகமொன்றில் லைவ்வில் வந்த சல்மா அதை மறுத்து, தான் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்க வரவில்லை எனவும் டாக்டர் ப்ரியா கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார். அதேபோல் உங்க வில்லி வெண்பா ஷாட்டிற்கு ரெடியாகிறார் எனவும், மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் பரீனா பக்கம் கேமராவை திருப்பி காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, நடிகை பரீனா தான் மட்டுமே கர்ப்பமாக இருப்பதாகவும் வெண்பா கர்ப்பமாக இல்லை எனவும் கூறி தான் சீரியலில் தொடர்ந்து நடிப்பதை உறுதி செய்திருந்தார். மேலும் தனது உடல்நிலை ஷூட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பதாகவும் கூறியிருந்தார்.